நிதி அமைச்சகம்
முதலீட்டுச் செலவு 35.4 % அதிகரிப்பு
2022-23 ஆண்டின் முதலீட்டுச் செலவு 2019-20 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரிப்பு
மொத்த முதலீட்டுச் செலவு ரூ. 10.68 லட்சம் கோடி என மதிப்பீடு
பசுமை கட்டமைப்புகளுக்கான நிதியாதாரத்திற்கென
பசுமை கடன் பத்திரங்கள் வெளியீடு
Posted On:
01 FEB 2022 1:03PM by PIB Chennai
“நடப்பாண்டில் ரூ. 5.54 லட்சம் கோடியாக இருந்த முதலீட்டுச் செலவு 2022-23 நிதியாண்டில் ரூ. 7.50 லட்சம் கோடியாக, அதாவது 35.4 சதவீதம், அதிகரிக்கப்பட்டுள்ளது” என மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த முதலீட்டுச் செலவு
மாநிலங்களுக்கான மானிய உதவிகள் மூலம் உருவாக்கப்படும் முதலீட்டு சொத்துகளுக்கான நிதி ஏற்பாடுகளை கணக்கில் எடுக்கையில் மத்திய அரசின் ஒட்டுமொத்த முதலீட்டுச் செலவு 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 10.68 லட்சம் கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது; இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.1 சதவீதமாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பசுமை கடன்பத்திரங்கள்
பொதுச்சந்தையில் அரசு திரட்டும் கடனின் ஒரு பகுதியாக பசுமை கட்டமைப்புகளுக்கான நிதியாதாரத்தைத் திரட்ட பசுமை கடன் பத்திரங்களை அரசு வெளியிடும் என்றும் திருமதி. சீதாராமன் அறிவித்தார். இதில் கிடைக்கும் தொகை பொருளாதாரத்தில் கார்பன் செறிவை குறைக்க உதவும் பொதுத்துறை திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
********
(Release ID: 1794372)