நிதி அமைச்சகம்
ஏர் இந்தியாவின் உரிமையாளர் மாற்ற பணி முடிவடைந்தது
प्रविष्टि तिथि:
01 FEB 2022 1:01PM by PIB Chennai
‘‘புதிய பொதுத்துறை நிறுவன கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், ஏர்இந்தியாவின் உரிமையாளர் மாற்ற பணிகள் நிறைவடைந்துள்ளன’’ என மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தி்ல இன்று தாக்கல் செய்த அவர் மேலும் கூறியதாவது:
நீலாஞ்சல் இஸ்பாட் நிகாம் நிறுவனத்துக்கு பங்குதாரர் தேர்வு செய்யப்பட்டு்ளளது. இதேபோல் எல்ஐசி பங்குகள் தொடர்பான விஷயமும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 2022-23ம் ஆண்டுக்கு இதர பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மாற்ற பணிகளும் நடந்து வருகின்றன.
நிதி கட்டமைப்பு மற்றும் மேலாண்மைக்கான தேசிய வங்கி (NaBFID) மற்றும் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் ஆகியவை தங்கள் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
துரிதமான பெருநிறுவனம் வெளியேற்றம்
புதிய நிறுவனங்களின் துரிதமான பதிவுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பெருநிறுவனங்கள் வெளியேற்றத்துக்கான மையம் (C-PACE) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தானாக வெறியேறும் பணிகள் துரிதமாக நடைபெறும். தற்போது 2 ஆண்டுகளாக உள்ள இதன் கால அளவு, 6 மாதங்களுக்கு கீழாக குறையும்.
திவால் மற்றும் நொடிப்புநிலை விதி
திவால் நடவடிக்கைகளில் தீர்வுகாணும் நடைமுறையை மேம்படுத்த, திவால் மற்றும் நொடிப்பு விதியில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
******
(रिलीज़ आईडी: 1794367)
आगंतुक पटल : 317