நிதி அமைச்சகம்
‘உடல்நலம் மற்றும் கல்வி செஸ்' வணிகச் செலவாக அனுமதிக்கப்படமாட்டாது
प्रविष्टि तिथि:
01 FEB 2022 1:07PM by PIB Chennai
உடல்நலம் மற்றும் கல்வி செஸ்' வணிகச் செலவாக அனுமதிக்கப்படமாட்டாது. இதனை மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார்.
வருமான வரி என்பது வணிக வருவாயைக் கணக்கிடுவதற்கு அனுமதிக்கக்கூடிய செலவு அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் கூறினார். இதில் வரி மற்றும் செஸ் போன்ற கூடுதல் கட்டணங்களும் அடங்கும்.
குறிப்பிட்ட அரசின் நலத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக வரி செலுத்துவோரிடம் இருந்து ‘சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி’ கூடுதல் கட்டணமாக பெறப்படுகிறது என்று அவர் விளக்கினார். சில நீதிமன்றங்கள் ‘சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரியை’ வணிகச் செலவாக அனுமதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர், இது சட்டமன்ற நோக்கத்திற்கு எதிரானது என்றும், வருமானம் மற்றும் லாபத்தின் மீதான கூடுதல் கட்டணம் அல்லது செஸ் ஆகியவை வணிகச் செலவாக அனுமதிக்கப்படமாட்டாது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
••••
(रिलीज़ आईडी: 1794271)
आगंतुक पटल : 405
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Urdu
,
Marathi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam