நிதி அமைச்சகம்
பொருளாதார மீட்சி காரணமாக 2020-21-ன் கடைசி காலாண்டில் வேலை வாய்ப்புக்கான குறியீடுகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Posted On:
31 JAN 2022 3:05PM by PIB Chennai
கொவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்த 2020-21-ம் ஆண்டின் முதல் காலாண்டில் குறைவாக இருந்த வேலை வாய்ப்புக்கான குறியீடுகள் தற்போது குறிப்பிடத்தக்கவகையில் மீட்சி அடைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால வரிசைப்படியான தொழிலாளர்கள் சக்தி ஆய்வுத் தரவுகளின்படி, மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் மூலம் 2020-21-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம், பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளால் செயல்பட்டு வரும் சமுக சேவைகளுக்கான செலவினங்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6.2 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு மற்றும் பாலின விகிதங்களின் சமுகக் குறியீடுகள் மேம்பட்டு வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
***************
(Release ID: 1793965)
Visitor Counter : 257