நிதி அமைச்சகம்

2022-22-ம் ஆண்வு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக் கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை’’

Posted On: 31 JAN 2022 3:10PM by PIB Chennai

இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக்  கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை’’.  இது கோவிட்-19 பெருந்தொற்றைச்  சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையில் அமல்படுத்தப்பட்டது.  பல தரப்பினரின் கருத்துக்கள், நிகழ்நேர கண்காணிப்பு, இலகுவான நடவடிக்கைகள் மூலம் இந்த விரைவான மற்றும் சுறுசுறுப்பான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டதாக பொருளதார ஆய்வறிக்கையின் முன்னுரை தெரிவிக்கிறது. 

கருத்துகேட்பு அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் எப்போதும் சாத்தியமாக இருந்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிகழ்நேர தரவுகள், தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உதவுவதால், விரைவான, சுறுசுறுப்பான திட்டம் இன்று பொருத்தமாக உள்ளது. ஜிஎஸ்டி தகவல்கள், டிஜிட்டல் முறையிலான கட்டணங்கள், செயற்கைகோள் புகைப்படங்கள், மின்சார உற்பத்தி, சரக்குப்  போக்குவரத்து, உள்நாட்டு/வெளிநாட்டு வர்த்தகம் போன்ற தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.

இவற்றில் சில பொதுத்  தளங்களில் இருந்தும், பல புதுமையான முறைகளில் தனியார் துறையினரால் பெறப்படுகிறது.

* இந்தப்  பொருளாதார ஆய்வறிக்கையின் மற்றொரு சிறப்பம்சம், கலை மற்றும் அறிவியல் கொள்கை தாயாரிப்புடன் தொடர்புடையது. இது கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைபற்றியது அல்ல, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றம், நுகர்வோர் நடவடிக்கை, விநியோக சங்கிலிகள், சர்வதேச நிலவரங்கள், பருவநிலை மாற்றம் உட்பட பல காரணங்களால் கோவிட் தொற்றுக்கு பிந்தைய நீண்டகால நிச்சயமற்ற தன்மை பற்றியது. இந்த நிச்சயமற்ற தனமையை  அங்கீகரிப்பது, நீண்டகால விநியோக பாதுகாப்பு யுக்தியைக்  தெரிவிப்பதாக உள்ளது :  ஒரு புறம் புத்தாக்கம் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள்அதே நேரத்தில் மறுபுறம் பொருளாதா மீட்புக்கான முதலீடு, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் மிகப் பெரிய நடவடிக்கைகள்.

 

பாதுகாப்பு குறித்த மத்திய அரசின் பல நடவடிக்கைகளையும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒழுங்குமுறையில் தளர்வு, எளிதான நடைமுறை, தனியார் மயமாக்கம், அன்னியச்  செலாவணி கையிருப்பு, பணவீக்க இலக்கு, அனைவருக்கும் வீடு, பசுமைத்  தொழில்நுட்பம், திவால் மற்றும் நொடிப்பு விதிமுறைகள், ஏழைகளுக்குச்  சுகாதார காப்பீடு, நிதி உள்ளடக்கம், கட்டமைப்புக்கான செலவினம், நேரடிப்  பணப்  பரிமாற்றம் போன்ற மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான தொடர்புகளை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என இந்தப்  பொருளாதார ஆய்வறிக்கை எதிர்பார்க்கிறது. 

 

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, முதல் ஆய்வறிக்கைக்கு பிந்தைய ஆய்வறிக்கை ஆவணம் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

இந்த இரட்டை அறிக்கைக்கு பதில் தற்போது, ஒரே ஆய்வறிக்கையாகவும், புள்ளி விவரங்களுக்கு தனி அறிக்கையாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டுப்  பொருளாதார ஆய்வறிக்கை 900 பக்கங்கள் கொண்டாதாகத்  தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு ஆய்வறிக்கை ஒரே புத்தமாகவும், புள்ளிவிவரங்களுக்குத்  தனி அறிக்கையாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை அடுத்த சில ஆண்டுகளில் புதிய வகையான சமூக-பொருளாதாரத் தரவுகளை உள்ளடக்கிய பின்னூட்ட சுழற்சி அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று நம்புகிறது. மேலும் இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் நகரமயமாக்கல், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், வேளாண் நடைமுறைகள் போன்றவற்றை விளக்குவதற்கு செயற்கைகோள் தரவுகளும், படங்களும் பயன்படுத்துப்பட்டுள்ளன.

 

***************



(Release ID: 1793962) Visitor Counter : 426