நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மதிப்பீடுகளின் படி, 2021-24-ம் ஆண்டில் உலகில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்

प्रविष्टि तिथि: 31 JAN 2022 3:11PM by PIB Chennai

பரந்துவிரிந்த தடுப்பூசி வழங்கல்விநியோக சீர்திருத்தங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை தளர்த்துதலால் ஏற்படும் லாபங்கள்வலுவான ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் மூலதன செலவினங்களை அதிகரிக்க நிதி கிடைத்தல் ஆகியவற்றால் 2022-23-ம் ஆண்டில் 8.0-8.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியை இந்தியா காணும்.

 

2021-22-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி அமைப்பு நல்ல நிலையில் உள்ளதால்  தனியார் துறை முதலீடு வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன என இது கூறுகிறது.

 

பெருந்தொற்று சார்ந்த பொருளாதார சீர்குலைவு இனி இருக்காதுபருவமழை வழக்கமான அளவில் இருக்கும்முக்கிய மத்திய வங்கிகளால் உலகளாவிய பணப்புழக்கத்தை திரும்பப் பெறுவது பரந்த அளவில் ஒழுங்காக நடைபெறும் எண்ணெய் விலை $70- $75/பிபிஎல் எனும் வரம்பில் இருக்கும்  மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் தொடர்ந்து சரியாகும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் 2022-23-க்கான வளர்ச்சிக் கணிப்பு அமைந்துள்ளது.

 

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

உலக வங்கிஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மதிப்பீடுகளின் படி, 2021-24-ம் ஆண்டில் உலகில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.

 

* 2021-22ல் இந்தியப் பொருளாதாரம் 9.2% வளர்ச்சி அடையும்.

 

முந்தைய ஆண்டில் 3.6% ஆக இருந்த விவசாய வளர்ச்சி 2021-22-ல் 3.9% வளர்ச்சி அடையும்.

 

*  2020-21 ஆம் ஆண்டில் 7% தொய்வில் இருந்து 2021-22-ம் ஆண்டில் 11.8% ஆக வளரும் வகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத்  தொழில்துறை எட்டவுள்ளது.

 

கடந்த ஆண்டு 8.4% சரிவைச்  சந்தித்த சேவைகள் துறை 2021-22-ல் 8.2% வளர்ச்சியை எட்டும்.

 

அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பர் 31-ல் 634 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது, 13 மாத இறக்குமதிகளுக்கு சமமாகவும்நாட்டின் வெளிப்புறக்  கடனை விட அதிகமாகவும் இது உள்ளது.

 

* 2021-22-ல் 15% வலுவான வளர்ச்சியைமுதலீடுகள்  காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

* 2021 டிசம்பரில் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) ஒருங்கிணைந்த பணவீக்கமான 5.6%, சகிப்புத்தன்மை இலக்கு வரையறைக்குள் உள்ளது,

 

 

 

*21 ஏப்ரல்-நவம்பருக்கான நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 46.2% ஆக உள்ளது.

 

 

பெருந்தொற்றுக்கு இடையிலும் மூலதனச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது; 2021 ஏப்ரல்-நவம்பரில் 75 ஐபிஓ வெளியீடுகள் மூலம் ரூ 89 ஆயிரம் கோடிக்கு மேல் திரட்டப்பட்டதுகடந்த தசாப்தத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இது அதிக அளவு ஆகும்.

 

மேக்ரோ-பொருளாதார நிலைத்தன்மை குறிகாட்டிகள் இந்தியப் பொருளாதாரம் நன்றாக உள்ளதாக பரிந்துரைக்கின்றன.

 

                                                                                ***********************


(रिलीज़ आईडी: 1793924) आगंतुक पटल : 928
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Telugu , Bengali , English , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Kannada , Malayalam