பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – மத்திய ஆசியா மெய்நிகர் உச்சி மாநாடு

Posted On: 27 JAN 2022 8:31PM by PIB Chennai

2022 ஜனவரி 27-ந் தேதி மெய்நிகர் வடிவில் நடைபெற்ற முதலாவது இந்தியா-மத்திய ஆசியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கும், மத்திய ஆசியா நாடுகளுக்கும் இடையிலான ராஜீய உறவுகள் தொடங்கி 30 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்தியா-மத்திய ஆசியா உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய ஆசிய தலைவர்கள் விவாதித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக தலைவர்கள் அனைவரும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாட்டின் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இசைவு தெரிவித்தனர். வெளியுறவு அமைச்சர்கள், வர்த்தக அமைச்சர்கள், கலாச்சாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் மட்டத்தில் அடிக்கடி கூட்டங்களை நடத்தி உச்சி மாநாட்டுக்கான களப்பணிகளை தயார் செய்ய அவர்கள் ஒப்புதல் அளித்தனர். புதிய நடைமுறையை அமல்படுத்த இந்தியா-மத்திய ஆசிய செயலகம் புதுதில்லியில் அமைக்கப்படும்.

வர்த்தகம், தொடர்பு, ஒத்துழைப்பு மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். பொது சொற்களுக்கான இந்தியா-மத்திய ஆசியா அகராதியை உருவாக்குவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான கூட்டுக்குழு அமைப்பது, ஆண்டுதோறும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு 100 உறுப்பினர் இளைஞர் பிரதிநிதிகளை அனுப்புவது, மத்திய ஆசிய ராஜீய உறவுகளுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதநேய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்ற இந்தியாவின் நடவடிக்கையை பிரதமர் தெரிவித்தார். உச்சி மாநாட்டின் முடிவில் விரிவான கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

***************


(Release ID: 1793217) Visitor Counter : 589