கலாசாரத்துறை அமைச்சகம்
அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் பற்றிய படக்கதை புத்தகம்: மத்திய அமைச்சர் திருமதி மீனாக்ஷி லெகி வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
27 JAN 2022 4:47PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீராங்கணைகள் பற்றிய படக்கதை புத்தகத்தை மத்திய அமைச்சர் திருமதி மீனாக்ஷி லெகி, புதுதில்லியில் இன்று வெளியிட்டார். அமர் சித்ரா கதா அமைப்புடன் இணைந்து இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திருமதி மீனாக்ஷி லெகி கூறியதாவது:
நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டங்களை வழிநடத்திய பெண்களின் வாழ்க்கையை இந்த புத்தகம் கொண்டாடுகிறது. காலனி ஆதிக்கம், ஆதிக்க சக்தியை எதிர்த்துப் போராடிய ராணிக்களின் கதைகள் இந்த புத்தகத்தில் உள்ளன. தாய் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து, தங்கள் உயிரையும் பெண்கள் தியாகம் செய்துள்ளனர்.
இந்தியாவின் வரலாற்றைப் படித்தால், இந்தியக் கலாச்சாராத்தில் பெண்கள் கொண்டாடப்பட்டதை நாம் அறிகிறோம். இங்கு பாலின பாகுபாட்டுக்கு இடமே இல்லை. போர்களத்தில் வீரர்களைப் போல் போரிடும் தைரியம் மற்றும் உடல் வலிமையைப் பெண்கள் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பெண்களும் குரல் கொடுத்துள்ளனர்.
உதாரணத்துக்கு, ராணி அபாக்கா, போர்ச்சுகீசிய தாக்குதலைப் பல தசாப்தங்களாக முறியடித்துள்ளார். ஆனால், இது குறித்த வரலாற்றில் அவ்வளவாக தெரிவிக்கப்படவில்லை. தற்போது பிரதமரின் தொலைநோக்கான, விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, இந்த அறியப்படாத பிரபலங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படுவர். கடந்த கால வரலாற்றை இளைஞர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களைப் பெருமிதப்படச் செய்யும்போதுதான், விடுதலையின் கொண்டாட்டத்துக்குப் பொருள் இருக்கும். அதிகம் அறியப்படாத சுதந்திரப் பேராட்ட வீராங்கனைகளின் கதைகளை தொகுத்ததற்காக அமர் சித்ரா கதா அமைப்புக்கு நன்றி. இவ்வாறு மத்திய அமைச்சர் திருமதி மீனாட்சி லெகி தெரிவித்தார்.
அமர் சித்ரா கதா அமைப்புடன் இணைந்து அதிகம் அறிப்படாத 75 சுதந்திர போராட்ட பிரபலங்களின் கதைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் கர்நாடகா மாநிலத்தின் உல்லல் ராணி அபாக்கா, தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார் உட்பட பலரது கதைகள் அடங்கியுள்ளன. 25 அறியப்படாத பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பைத் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இது விரைவில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792966
----
(रिलीज़ आईडी: 1793001)
आगंतुक पटल : 420