பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் 73-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
26 JAN 2022 9:54PM by PIB Chennai
இந்தியாவின் 73-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
நேபாளப் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது;
“உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. PM @SherBDeuba நமது வலுவான, தொன்மையான நட்புறவை மேலும் பலப்படுத்த நாம் ஒருங்கிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.”
பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது;
“இந்தியாவின் குடியரசு தினத்தன்று உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. @PMBhutan பூடானுடன் தனித்துவ, நீடித்த நட்புறவுக்கு இந்தியா ஆழமான மதிப்பைக் கொண்டுள்ளது. பூடான் அரசுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்கள். நமது உறவுகள் மேலும் மேலும் பலப்படட்டும்.”
இலங்கைப் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது;
“பிரதமர் ராஜபக்சேவுக்கு நன்றி. சுதந்திரத்தின் 75 ஆண்டு வரலாற்றைக் கொண்டாடுவதால் இந்த ஆண்டு நமது இரு நாடுகளின் சிறப்புக்குரியதாகும். நமது மக்களுக்கிடையேயான உறவுகள் தொடர்ந்து வலுப்படட்டும்.”
இஸ்ரேல் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது;
“இந்தியாவின் குடியரசு தினத்திற்கு உங்களின் இனிய வாழ்த்துக்களுக்காக நன்றி. PM @naftalibennett கடந்த நவம்பர் மாதம் நடந்த நமது சந்திப்பை நான் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன். உங்களின் முன்னேறுவதற்கான உங்களின் கண்ணோட்டத்துடன் இந்தியா – இஸ்ரேல் நட்புறவு தொடரும் என்று நான் நம்புகிறேன்.”
***
(Release ID: 1792923)
Visitor Counter : 179
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam