பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பலியானோர் குடும்பங்களுக்கு பிஎம்என்ஆர்எஃப் நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2022 10:56AM by PIB Chennai
மகாராஷ்டிராவில் செல்சூரா அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண (பிஎம்என்ஆர்எஃப்) நிதியிலிருந்து கருணைத் தொகையையும் பிரதமர் அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;
“மகாராஷ்டிராவில் செல்சூரா அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக வருந்துகிறேன். இந்த சோகமான தருணத்தில் தங்களின் நேசத்திற்குரியவர்களை இழந்திருப்போருக்கு எனது ஆறுதல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்: பிரதமர்
செல்சூரா அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண (பிஎம்என்ஆர்எஃப்) நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையை பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1792399)
வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam