உள்துறை அமைச்சகம்

சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் 2022


குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம்( நிறுவன பிரிவு), பேராசிரியர் வினோத் சர்மா ( தனிநபர் பிரிவு) இந்த ஆண்டின் சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளான இன்று மாலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2019, 2020, 2021 விருதாளர்களுக்கும் விருதுகளை வழங்குகிறார்

Posted On: 23 JAN 2022 9:06AM by PIB Chennai

பேரிடர் மேலாண்மையில், தன்னலமற்ற, மதிப்புமிக்க தொண்டாற்றிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்ற பெயரில் விருது ஒன்றை நிறுவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த விருது ரூ.51 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு சான்றிதழ், தனிநபர் பிரிவில் ரூ.5 லட்சம் மற்றும் சான்றிதழைக் கொண்டது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2021 ஜூலை 1 முதல் பெறப்பட்டன. இந்த ஆண்டு விருதுக்கு, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் விரிவான விளம்பரம் செய்யப்பட்டது. இதில், நிறுவனங்களில் இருந்தும், தனிநபர்களிடம் இருந்தும் 243 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பேரிடர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய, குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம்( நிறுவன பிரிவு), பேராசிரியர் வினோத் சர்மா ( தனிநபர் பிரிவு) இந்த ஆண்டின் சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளான இன்று மாலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2019, 2020, 2021 விருதாளர்களுக்கும் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்

 

****



(Release ID: 1791949) Visitor Counter : 483