பாதுகாப்பு அமைச்சகம்
மேம்படுத்தப்பட்ட திறனுடைய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
20 JAN 2022 3:42PM by PIB Chennai
மேம்படுத்தப்பட்ட செயல் திறனுடன் உள்நாட்டு கருவிகள் அதிகளவில் பொருத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து இன்று (20.01.2022) காலை 10.30 மணியளவில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை அதன் இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணை சோதனை பிரம்மோஸ் திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் பெரும் மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்த ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791199
***************
(रिलीज़ आईडी: 1791224)
आगंतुक पटल : 387