பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

என்டிஆர்எஃப் அணி உருவாக்கப்பட்ட தினத்தில் அவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 19 JAN 2022 10:08AM by PIB Chennai

தேசிய பேரிடர் மீட்புப்படை (என்டிஆர்எஃப்) அணி உருவாக்கப்பட்ட தினத்தில் அவர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

@NDRFHQ   அணி உருவாக்கப்பட்ட தினத்தில் அவர்களின் கடின உழைப்புக்காக பாராட்டுகிறேன். மிகவும் சவாலான சூழ்நிலைகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலவற்றில் அவர்கள் முன்னணியில் இருந்துள்ளனர். என்டிஆர்எஃப்-ன் துணிவும், தொழில்முறையும் மிகவும் ஊக்கமளிப்பவை. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

பேரிடர் நிர்வாகம் என்பது அரசுகளுக்கும், கொள்கை வகுப்போருக்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும். செயல்பாட்டு அணுகுமுறையோடு, பேரிடர் மேலாண்மை அணிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பின், பேரிடரை தாக்குப் பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு குறித்து நாங்கள் சிந்திக்கவும், இந்த விஷயம் தொடர்பாக ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவும் வேண்டியுள்ளது.

‘பேரிடரை தாக்குப் பிடிக்கும் அடிப்படை கட்டமைப்பு ஒருங்கிணைப்பைவடிவமைக்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது. நமது என்டிஆர்எஃப்  அணிகளின் திறனை மேலும் கூர்மைப்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதனால் எந்தவொரு சவாலான காலத்திலும் அதிகபட்ச உயிர்களையும், உடைமைகளையும் நாம் பாதுகாக்க முடியும்”.

 

***


(रिलीज़ आईडी: 1790895) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam