பிரதமர் அலுவலகம்

பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மஹராஜ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 17 JAN 2022 9:50AM by PIB Chennai

பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மஹராஜ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த  இரங்கல் தெரிவித்துள்ளார்அவரது மறைவு ஒட்டுமொத்தக் கலை உலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

ஒரு ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"
உலகம் முழுவதும் இந்திய நடனத்திற்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிய பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்களின்  மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறதுஅவரது மறைவு ஒட்டுமொத்தக் கலை உலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்இந்தத்  துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்ஓம் சாந்தி!"

***************



(Release ID: 1790460) Visitor Counter : 268