பிரதமர் அலுவலகம்
உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் 'உலக நிலை' குறித்த சிறப்புரையை ஜனவரி 17 அன்று பிரதமர் வழங்கவிருக்கிறார்
Posted On:
16 JAN 2022 7:07PM by PIB Chennai
உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் 'உலக நிலை' குறித்த சிறப்புரையை ஜனவரி 17, 2022 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கவிருக்கிறார்.
காணொலி மூலம் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி 2022 ஜனவரி 17 முதல் 21 வரை நடைபெறும். ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுவா ஓன் டேர் லயன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், சீன மக்கள் குடியரசின் அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் உரையாற்ற உள்ளார்கள்.
மூத்த தொழில் துறை தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சமுதாய சங்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில் உலகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து அவர்கள் விவாதித்து அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
****
(Release ID: 1790378)
Visitor Counter : 276
Read this release in:
Kannada
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam