வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்க உதவி மையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளை மத்திய அரசு அமைத்துள்ளது

प्रविष्टि तिथि: 07 JAN 2022 1:41PM by PIB Chennai

கொவிட் பாதிப்புகள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை கவனித்து வருகிறது.

 

பல்வேறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சரக்குகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுகிறதா என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை கண்காணிக்கும்.

 

சரக்குகளின் போக்குவரத்து மற்றும் விநியோகம் அல்லது வளங்களைத் திரட்டுவதில் உற்பத்தி, போக்குவரத்து, விநியோகம், மொத்த விற்பனை அல்லது மின்-வணிக நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொண்டால், பின்வரும் தொலைபேசி எண்கள்/மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்:-

தொலைபேசி: + 91 11 23063554, 23060625

மின்னஞ்சல்: dpiit-controlroom[at]gov[dot]in

மேற்கண்ட தொலைபேசி எண்கள் 05.01.2022 முதல் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். பல்வேறு பங்குதாரர்களால் தெரிவிக்கப்படும் சிக்கல்கள் தொடர்புடைய மாநில/யூனியன் பிரதேச அரசாங்கங்களின் கவனத்திற்கு இந்தக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் எடுத்துக் கொள்ளப்படும்.

கொவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் வர்த்தகப் பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களின் நிலையைக் கண்காணிக்கும் பணியில் வர்த்தகத் துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் ஈடுபட்டுள்ளன. சர்வதேச வர்த்தகம் தொடர்பாக எழும் சிக்கல்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பொருத்தமான தீர்வுகளைப் பெறுவதற்கும் ‘கொவிட் உதவி மையத்தை’ வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் செயல்படுத்தியுள்ளது.

 

https://dgft.gov.in தளத்தின் வாயிலாக கொவிட் உதவி மையத்தை வர்த்தகர்கள் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

 

இது தவிர, dgftedi[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 1800-111-550 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சலின் தலைப்பில் ‘Covid-19 Helpdesk’ என குறிப்பிட வேண்டும்.

 

ஸ்டேட்டஸ் டிராக்கர் வசதியைக் கொண்டு தீர்வுகளின் நிலையை அறிந்து கொள்ளலாம். இது தொடர்பாக மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவலும் அனுப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788275

                                                                                **************


(रिलीज़ आईडी: 1788461) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Odia , Kannada