பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மகளிர் சக்தி விருதுக்கான (நாரி சக்தி புரஸ்கார்-2021) விண்ணப்பங்களை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது.

Posted On: 06 JAN 2022 3:06PM by PIB Chennai

மகளிர் சக்தி விருதுக்கான (நாரி சக்தி புரஸ்கார்-2021) பரிந்துரைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது. விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். www.awards.gov.in என்ற போர்ட்டலில் அவற்றை சமர்ப்பிக்கலாம்.

2022 ஜனவரி 31 வரை பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் / பரிந்துரைகளும் 2021-ம் ஆண்டிற்கான நாரி சக்தி புரஸ்கார் விருதுகளுக்கு பரிசீலிக்கப்படும். 

பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக அதிகாரமளித்தலில் சிறந்த பணிகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. நாரி சக்தி புரஸ்கார்-2021 சர்வதேச மகளிர் தினத்தின் போதுஅதாவது மார்ச் 8, 2022 அன்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும்.

 

நாரி சக்தி புரஸ்காருக்கான தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் https://wcd.nic.in/acts/guidelines-nari-shakti-puraskar-2021-onwards எனும் முகவரியில் கிடைக்கின்றன.

நாரி சக்தி புரஸ்கார் விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பெண்களின் அதிகாரமளித்தலுக்கு அவர்களின் சேவையை அங்கீகரிக்கிறது. இந்த விருது சான்றிதழுடன்இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும் கொண்டது ஆகும்.

அனைத்து தனி நபர்களும் நிறுவனங்களும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுகளின் அதிகபட்ச எண்ணிக்கை (தனிநபர் மற்றும் நிறுவனம் உட்பட) 15 ஆகும். இருப்பினும்மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் தலைமையிலான தேர்வுக் குழுவின் விருப்பப்படி இந்த அதிகபட்ச எண்ணிக்கையில் தளர்வு அனுமதிக்கப்படலாம்.

விருதுகளுக்கான சுய விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும். விருதுக்கு ஒரு தனிநபர் / நிறுவனத்தை போதுமான காரணங்களுடன் தேர்வுக் குழு சுயமாகவும் பரிந்துரைக்கலாம்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் நிலை அதிகாரியின் தலைமையிலான தேர்வுக் குழுவிருதுகளுக்கு விண்ணப்பித்த / பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சாதனைகளைக் கருத்தில் கொண்டு விருதுகளுக்குப் பெறப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்துபட்டியலிடும்.

 

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையிலான தேர்வுக் குழுவால் விருது பெற்றவர்களின் இறுதித் தேர்வு முடிவு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787981

*****



(Release ID: 1788029) Visitor Counter : 550