இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

கொவிட் தொற்று அதிகரிப்பதை முறியடிக்க இந்திய வி்ளையாட்டு ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

Posted On: 06 JAN 2022 3:25PM by PIB Chennai

பெரும்பாலும் உருமாறிய ஒமக்ரான் காரணமாக கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரிப்பதால் அதனைக் கையாள இந்திய விளையாட்டுக்கள் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இவை பல்வேறு தனித்திறனுக்கான தேசிய மையங்கள் மற்றும் தற்போது நடைபெறும் தேசிய பயிற்சி முகாம்களில் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்.

பயிற்சி மையங்களுக்கு வருகின்ற அனைத்து விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கட்டாயம் ஆர்ஏடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  இந்த பரிசோதனை எதிர்மறையாக இருந்தால், அவர்கள் சேர்ந்ததிலிருந்து ஆறு நாள் வரை அவர்கள் தனியாக உணவு உண்டு பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். ஐந்தாவது நாளில் மீண்டும் அவர்களுக்கு ஆர்ஏடி சோதனை செய்யப்படும். இதில் நேர்மறை (பாசிட்டிவ்) முடிவு  வந்தால் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவார்கள். பரிசோதனையில் எதிர்மறை முடிவைப் பெறுவோர் இயல்பான பயிற்சியைத் தொடரலாம்.

தனித்திறனுக்கான தேசிய மையங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், வெளிப்பணியாளர்கள் ஆகியோருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை தோராயமான பரிசோதனை செய்யப்படும்.

***************



(Release ID: 1788026) Visitor Counter : 249