நிதி அமைச்சகம்

17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.9,871 கோடி விடுவிப்பு

Posted On: 06 JAN 2022 1:28PM by PIB Chennai

வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்திற்கு இந்த மாதம் ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த தொகையையும் சேர்த்து தமிழகத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை, ரூ.1836.67 கோடியை விடுவித்துள்ளது.

வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.9,871 கோடியை இன்று விடுவித்துள்ளது. இது மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மானியத்தின் 10-வது தவணையாகும். தகுதி வாய்ந்த மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.98,710 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் 275-வது பிரிவின்படியும், வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் 15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மாதம் தோறும் இந்தத் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787956



(Release ID: 1787958) Visitor Counter : 180