தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

“ஆடியோ கான்பரன்சிங்/ ஆடியோடெக்ஸ்/ வாய்ஸ் மெயில் சேவைகளுக்கான உரிமக் கட்டமைப்பு” ஒருங்கிணைந்த உரிமத்தின் ஒரு பகுதியாக இருக்க தொலைத்தொடர்புத் துறை முடிவு

Posted On: 30 DEC 2021 4:01PM by PIB Chennai

தொலைத்தொடர்பு துறையில் செய்யப்பட்டு வரும் தொடர்ச்சியான கொள்கை சீர்திருத்தங்களின் வரிசையில்ஒன்றிணைந்த உரிமத்தின் கீழ் ஆடியோ கான்பரன்சிங் / ஆடியோடெக்ஸ் / வாய்ஸ் மெயில் சேவைகளுக்கான உரிம கட்டமைப்பு மற்றும் வாய்ஸ் மெயில் சேவையின் தற்போதைய தனி உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தங்களை அரசு வெளியிட்டுள்ளது.

தற்சமயம்16.07.2001 தேதியிட்ட வழிகாட்டுதல்களின்படிவிஎம்எஸ்/ஆடியோடெக்ஸ்/யூஎம்எஸ்-க்கான தனி உரிமம் தொலைத்தொடர்பு துறையால் வழங்கப்படுகிறது.

ஆடியோ கான்பரன்சிங்/ஆடியோடெக்ஸ்/வாய்ஸ் மெயில் சேவைகளுக்கான உரிமக் கட்டமைப்பு” குறித்த தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைகளை ஆய்வு செய்த பிறகுஇந்த அங்கீகாரத்திற்கான புதிய அத்தியாயத்தைச் சேர்ப்பதன் மூலம் இந்த உரிமத்தை ஒருங்கிணைந்த உரிமத்தின் ஒரு பகுதியாக மாற்ற தொலைத்தொடர்பு துறை முடிவு செய்துள்ளது.

இருந்தபோதிலும்விஎம்எஸ்/ஆடியோடெக்ஸ்/யூஎம்எஸ் உரிமம் வைத்திருக்கும் உரிமதாரர்களுக்கு ஏற்கனவே உள்ள உரிமத்திலிருந்து ஒருங்கிணைந்த உரிமத்திற்கு இடம்பெயர்வது அவர்களது விருப்பத்தின் பேரிலேயே இருக்கும்.

16.07.2001 அன்று வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிராக விஎம்எஸ்/ஆடியோடெக்ஸ்/யூஎம்எஸ் உரிமத்திற்கு புதிய தனி உரிமம் அல்லது புதுப்பித்தல் வழங்கப்பட மாட்டாது.

திருத்தப்பட்ட கொள்கையின்படி மாற்றங்களின் முக்கிய சிறப்பம்சங்கள் வருமாறு:

"ஆடியோ-கான்பரன்சிங்/ ஆடியோடெக்ஸ்/ வாய்ஸ் மெயில் சர்வீஸ்" என்ற அங்கீகாரத்திற்கான புதிய அத்தியாயத்தைச் சேர்ப்பதன் மூலம் "ஒருங்கிணைந்த உரிமத்தின்" பகுதியாக உரிமம் மாற்றப்படுகிறது.

டிஈசி தரநிலைகளின்படி ஆடியோ கான்பரன்சிங் யூனிட்டை பிஎஸ்டிஎன்/மொபைல் மற்றும் ஐபி நெட்வொர்க்குடன் இணைக்க முடியும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சேவை வழங்குநர்களின் வளங்களைப் பயன்படுத்தினாலும் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு டயல் அவுட் வசதி அனுமதிக்கப்படும்.

இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு பாயிண்ட்-டு-பாயிண்ட் கான்பரன்சிங் அனுமதிக்கப்பட்டுள்ளது.

யுஎல்-ன் கீழ் உரிமத்திற்கான சேவைப் பகுதி "எஸ்டிசிஏ" என்பதிலிருந்து "தேசிய அளவில்" அதாவது அகில இந்திய அளவில் மாற்றப்படுகிறது. இருப்பினும்விஎம்எஸ்/ஆடியோடெக்ஸ்/யுஎம்எஸ்-க்கான தனிப்பட்ட உரிமத்திற்கு எஸ்டிசிஏ முறையே இருக்கும்.

புதிய உரிமதாரர்கள் மற்றும் ஏற்கனவே உரிமம் பெற்றவர்களின் உரிமக் கட்டணம் ஏஜிஆரின் 8% ஆக இருக்கும். யுஎல்லின் மற்ற உரிமதாரர்களுக்கு இணையாக இது இருக்கும்.

01.01.2022 முதல் இந்த கட்டமைப்பு அமலுக்கு வரும்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786312

****



(Release ID: 1786344) Visitor Counter : 195