நித்தி ஆயோக்

22 தாய்மொழிகளில் புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்க மாநில மொழியில் புதிய கண்டுபிடிப்பு திட்டத்தை (விஐபி) அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கமும், நித்தி ஆயோகும் தொடங்கியுள்ளன

Posted On: 22 DEC 2021 1:10PM by PIB Chennai

நாடுமுழுவதும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்தோடு மாநில மொழியில்  புதிய திட்டம் என்ற முதன்முறை முயற்சியை அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கமும், நித்தி ஆயோகும் தொடங்கியுள்ளன. மத்திய அரசின் அட்டவணை மொழிகள் 22-ல் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்டுபிடிப்பு நடைமுறையை இதன் மூலம் எளிதாக  அறிய முடியும். 

இதற்குத் தேவையான திறன் கட்டமைப்பைக் கண்டறிந்து  பயிற்சி அளிக்க 22 மொழிகளில் ஒவ்வொன்றிலும் மாநில மொழியிலான  பணிக்குழு அமைக்கப்படும்.  ஒவ்வொரு பணிக்குழுவிலும் மாநில மொழி ஆசிரியர்கள், துறைசார்ந்த நிபுணர்கள், தொழில்நுட்ப எழுத்தாளர்கள், பிராந்திய அடல் பயிற்சி மையங்களின் தலைவர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

இந்த திட்டத்தை தொடங்குவதற்காக பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தில்லி ஐஐடி-யின்  வடிவமைப்புத் துறையுடன்  இணைந்து திட்டமிடப்படும்.  மேலும், தொழில் துறை புரவலர்கள், வடிவமைப்பு, சிந்தனை, நிபுணத்துவத்தை வழங்கவுள்ளனர், இந்தத் திட்டத்திற்கு தாராளமாக நிதியுதவி வழங்க சிஎஸ்ஆர் ஒப்புக் கொண்டுள்ளது.  இந்தப் பணிக்குழு 2021 டிசம்பர் முதல் 2022 ஏப்ரல் வரை பயிற்சிக் காலமாக இருக்கும். 

மிக முக்கியமான கலாச்சார சொத்துக்களில் ஒன்றான மாநில மொழிகள் மூலம் அதன் பன்முக சமூக மற்றும் கலாச்சார அடையாளத்தை இந்தியா கண்டறிந்துள்ளது என இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் தெரிவித்தார். 

நாட்டின் 22 மொழிகளோடு  ஆங்கிலத்திலும், புதிய கண்டுபிடிப்பு நடைமுறைகள் எனும் முன்முயற்சியைத் தொடங்கும்.  உலகின் முதலாவது நாடாக இந்தியா இருக்கும்.  ஒரு மொழியையும், கலாச்சாரத்தையும் கற்பதற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் உள்ளூர், மாநில, தேசிய, உலகளாவிய, புதிய கண்டுபிடிப்பு தொடரை வளப்படுத்துவதை நோக்கி செல்லலாம் என அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் கருதுகிறது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784135

•••••••••••••••



(Release ID: 1784193) Visitor Counter : 338