பாதுகாப்பு அமைச்சகம்
‘ வெற்றி தினப் பொன்விழா’ அன்று, 1971-ல் ராணுவத்தின் துணிச்சலையும், தியாகத்தையும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்
Posted On:
16 DEC 2021 10:04AM by PIB Chennai
2021, டிசம்பர் 16 அன்று ‘வெற்றி தினப் பொன்விழா’வையொட்டி 1971 போரின் போது ராணுவ வீரர்களின் துணிச்சல், வீரம் மற்றும் தியாகத்தை நினைவுகூர்வதில் தேசத்துடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இணைந்தார். 1971-ன் போர் இந்தியாவின் ராணுவ வரலாற்றில் பொன்னான அத்தியாயம் என்று தொடர்ச்சியான டுவிட்டர்களில் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சரணாகதி அடைந்த வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் உட்பட 1971 போர் தொடர்பான சில பழமையான புகைப்படங்களையும் திரு ராஜ்நாத் சிங் பகிர்ந்துள்ளார்.
1971-ம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வெற்றி தினத்தின் பொன்விழா கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் பொதுவாக மக்களிடையே ஒற்றுமை, தேசியவாதம், பெருமிதம் என்ற செய்தியை பரப்புவதும், குறிப்பாக ராணுவத்தினருக்கு இத்துடன் இந்தப் போரில் பங்கேற்ற வீரர்களுக்குக் கூடுதலாக மதிப்பை வெளிப்படுத்துவதும் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782060
***
(Release ID: 1782144)
Visitor Counter : 168