சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் விநியோக சாதனங்களின் தயார் நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு

Posted On: 15 DEC 2021 3:57PM by PIB Chennai

மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் விநியோக சாதனங்களின் நிலவரம் குறித்து மத்திய அரசு  இன்று   ஆய்வு  மேற்கொண்டது.

மருத்துவ ஆக்ஸிஜன் சாதனங்களின் தயார் நிலை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பெருந்தொற்றை சமாளிக்க, மருத்துவ ஆக்ஸிஜன் முக்கியமான பொருள் என்றும், இதன் தடையற்ற விநியோகம் மிக முக்கியம் என அவர் இந்த கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய  அரசு வழங்கிய ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனங்களின் செயல்பாட்டு நிலவரத்தை  தினந்தோறும் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

நாட்டில் தற்போது 3,236 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த உற்பத்தி திறன் 3783 மெட்ரிக் டன்.  இது தவிர 1,14,000  ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் பிரதமர் நல நிதி மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 1374 மருத்துவமனைகளில்  958 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்குகள்  மற்றும் பைப்லைன் வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளதாகவும், இந்த வாய்ப்பை மாநிலங்கள் பயன்படுத்தி, ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என  கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மனோகர் அக்னானி, மாநிலங்களின் கண்காணிப்பு அதிகாரிகள், நிலக்கரி, மின்சாரம், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781722

                                                                                *****************

 

 (Release ID: 1781993) Visitor Counter : 176