சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவினர் இடஒதுக்கீட்டிற்கான தகுதிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2021 12:59PM by PIB Chennai
அரசியல் சாசன (103-வது) திருத்தச் சட்டம் 2019-ன்படி பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவு பயனாளிகளை அடையாளம் காண குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1781871)
வருகையாளர் எண்ணிக்கை : 274