தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
‘சம்பான்’ திட்டத்தின் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் பெறுகின்றனர்
Posted On:
09 DEC 2021 1:11PM by PIB Chennai
‘சம்பான்’ (SAMPANN) என்று அழைக்கப்படும் கணக்கியல் மற்றும் ஓய்வூதிய மேலாண்மை அமைப்பு மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
ஓய்வூதியம் செலுத்துவதற்காக வங்கிகள்/அஞ்சலகங்களுக்கு கமிஷன் செலுத்தப்படுவதால், இந்திய அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான மாதாந்திர சேமிப்பை ‘சம்பான்’ திட்டம் உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஜூன், 2021 நிலவரப்படி தோராயமாக ரூ. 11.5 கோடி வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளது.
மேலும் ஜூன், 2021 நிலவரப்படி ‘சம்பான்’ மூலம் 9,630 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், 1,01,341 லட்சம் ஒய்வூதியர்களுக்கு ரூ. 15,825.44 கோடி ஓய்வூதியம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய குறைகளை விரைவாகத் தீர்ப்பதற்கும், மேம்படுத்தப்பட்ட நல்லிணக்கம் / தணிக்கை செய்வதற்கும் மற்றும் கணக்கீட்டை எளிதாக்குவதற்கும் இந்தத் திட்டம் பெரிதும் உதவியுள்ளது.
(Release ID: 1779662)
Visitor Counter : 293