பிரதமர் அலுவலகம்
அரசியல் நிர்ணய சபையின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது அமர்வு நாளில் தலைசிறந்த அறிஞர்களுக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
Posted On:
09 DEC 2021 12:22PM by PIB Chennai
அரசியல் நிர்ணய சபையின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது அமர்வு நாளில் தலைசிறந்த அறிஞர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இன்றைய தினம், 75 ஆண்டுகளுக்கு முன் நமது அரசியல் நிர்ணய சபை முதன்முறையாகக் கூடிய நாளாகும். இந்திய மக்களுக்கு மதிப்புமிக்க அரசியல் சட்டத்தை வழங்கும் நோக்கத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பல்வேறு பின்னணிகளுடன், பல வகையான கொள்கைகளுடனும் கூட தலை சிறந்த அறிஞர்கள் ஒன்று கூடினார்கள். இந்த மாமனிதர்களுக்குப் புகழஞ்சலி.
இந்த சபையின் மூத்த உறுப்பினராக இருந்த டாக்டர் சச்சிதானந்த சின்ஹா, அரசியல் நிர்ணய சபையின் முதலாவது அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.
இவர் ஆச்சாரிய கிருபளானியால் அறிமுகம் செய்யப்பட்டு தலைமையிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
75 ஆண்டுகளுக்கு முன் நமது அரசியல் நிர்ணய சபை முதன்முறையாகக் கூடிய நாளான இன்றைய தினத்தில், இந்த மதிப்புமிகு கூட்ட நடவடிக்கைகள் பற்றியும், இதன் ஒரு பகுதியாக இருந்த தலைசிறந்த அறிஞர்கள் பற்றியும் கூடுதலாக அறிந்து கொள்ளுமாறு இளம் நண்பர்களை நான் வலியுறுத்துகிறேன். இதைச் செய்வதன் மூலம் அறிவுபூர்வமான அனுபவத்தை வளப்படுத்திக் கொள்ளலாம்.”
(Release ID: 1779634)
Visitor Counter : 209
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada