பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்

எய்ம்ஸ், உரத்தொழிற்சாலை மற்றும் ஐசிஎம்ஆர் மையத்தைத் தொடங்கி வைத்தார்
இரட்டை இயந்திர அரசு வளர்ச்சிப் பணிகளை இரட்டிப்பு வேகத்தில் செயல்படுத்தும் : பிரதமர்
“உரிமைகள் பறிக்கப்பட்டவர்கள் மற்றும் சுரண்டப்பட்டவர்களைப் பற்றி சிந்திக்கும் அரசு, கடுமையாக உழைத்து அதற்கான பலனையும் பெறுகிறது”
“எதுவும் முடியாது என்று கூறியவர்களுக்கு, புதிய இந்தியாவை படைப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு ஆதாரமே இன்றைய நிகழ்ச்சி”
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டு வரும் உத்தரப்பிரதேச அரசுக்கு பாராட்டு

Posted On: 07 DEC 2021 4:15PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர்  திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்

கோரக்பூரில் எய்ம்ஸ், உரத்தொழிற்சாலை மற்றும் ஐசிஎம்ஆர் மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பதிய கட்டடங்கள் திறக்கப்பட்டதை முன்னிட்டு  உத்தரப்பிரதேச மக்களுக்கு பிரதமர்  பாராட்டுத் தெரிவித்தார். எய்ம்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலைக்கு  5 ஆண்டுகளுக்கு முன்பு தாமே அடிக்கல் நாட்டியதுடன் இன்று அவற்றை தொடங்கி வைப்பதை நினைவுகூர்ந்த அவர், ஒரு திட்டத்தைத் தொடங்கினால் அதை முடிக்க அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இரட்டை இயந்திர அரசு இருந்தால் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தும் வேகமும் இரட்டிப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அரசு நல்ல நோக்கத்துடன் செயல்பட்டால், பேரிடர்கள் கூட அதற்கு தடையாக இருக்காது என்றும் அவர் கூறினார்ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் நலனில் அரசு கவனம் செலுத்தி, பாடுபட்டால் நல்ல விளைவுகளைப் பெற முடியும். புதிய இந்தியா தீர்மானித்துவிட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி ஆதாரம் என்றும் அவர் தெரிவித்தார்.  

மும்முனை அணுகுமுறையில், 100 சதவீதம் வேம்பு பூசிய யூரியாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், யூரியாவை தவறாகப் பயன்படுத்துவதை அரசு தடுத்துள்ளதாக  பிரதமர் தெரிவித்தார்தங்களது நிலத்திற்கு எந்த வகையான உரம் தேவை என்பதை  முடிவு செய்ய ஏதுவாக விவசாயிகளுக்கு மண்வள ஆரோக்கிய அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். யூரியா உற்பத்தியை அதிகரிக்க அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மூடப்பட்ட உரத்தொழிற்சாலைகள், மீண்டும் திறக்கப்பட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐந்து உரத்தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், நாட்டில் 60 லட்சம் டன் யூரியா கிடைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கரும்பு விவசாயிகளுக்காக சமீபத்திய ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு பணியாற்றியதற்காக உத்தரப்பிரதேச அரசை பிரதமர் பாராட்டினார். கரும்பு விவசாயிகளுக்கான கட்டுப்படியாகக்கூடிய விலையை அண்மையில் ரூ.300 வரை உயர்த்தியதற்காகவும், முந்தைய அரசுகள் கடந்த பத்தாண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கியதைவிட அதிகத் தொகை வழங்கியதற்காகவும் மாநில அரசுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

விடுதலைக்குப் பிறகு இந்த நூற்றாண்டு தொடங்கும் வரை, நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்ததாக பிரதமர் தெரிவித்தார்மேலும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பேயி அனுமதி அளித்தார்கடந்த 7 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதே  தமது அரசின் குறிக்கோள் என்றும் அவர் அறிவித்தார்.

கோரக்பூர் உரத்தொழிற்சாலை இந்தப் பகுதி விவசாயிகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், வேலைவாய்ப்பு வழங்குகிறது என்பதையும் அனைவரும் அறிவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆலை முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், அதனை மீண்டும் திறக்க முந்தைய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் கூறினார். கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்ததையும் அனைவரும் அறிவார்கள். 2017-க்கு முன்பு அரசை இயக்கியவர்கள், கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுவதற்கான இடம் வழங்க அனைத்து விதமான சாக்குப்போக்குகளையும் கூறி வந்தனர். இப்பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பெருமளவுக்கு குறைந்திருப்பதையும், மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் மையம் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகள்புதிய வலிமை பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அகந்தை மிகுந்த அரசியல், அதிகார அரசியல், ஊழல்கள், மற்றும் மாஃபியாக்களின் ராஜ்ஜியத்தை விமர்சித்த பிரதமர், இவை அனைத்தும் கடந்த காலத்தில் மக்களுக்கு துயரத்தைத்தான் ஏற்படுத்தியது என்றார். இது போன்ற சக்திகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய அரசு  ஏழைகளுக்காக அரசு கிடங்குகளை திறந்து விட்டிருப்பதாகக்  குறிப்பிட்ட பிரதமர்அதில் உள்ள உணவுப் பொருட்களை அனைத்து குடும்பங்களுக்கும் விநியோகிப்பதில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் மும்முரமாக இருப்பதாகவும்  தெரிவித்தார். இதன் பலனை உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுமார் 15 கோடி மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஹோலிப் பண்டிகைக்குப் பிறகும் பிரதமரின் கரீஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அண்மையில் நீட்டிக்கப்பட்டது. முந்தைய அரசுகள் கிரிமினல் குற்றவாளிகளுக்கு பாதகாப்பு அளித்ததன் மூலம் உத்தரப்பிரதேசத்திற்கு அவப்பெயரை தேடித் தந்தன. தற்போது மாஃபியாக்கள் சிறையில் உள்ளனர், முதலீட்டாளர்கள் உத்தரப்பிரதேசத்தில் சுதந்திரமாக முதலீடு செய்கின்றனர். இதுதான் இரட்டை இயந்திரத்தின் இரட்டை வளர்ச்சி. எனவே  உத்தரப்பிரதேசம் இரட்டை இயந்திர அரசின்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                                                                                                                       

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778867

 

------


(Release ID: 1778991) Visitor Counter : 250