சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெற சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு டிசம்பர் 3ம் தேதி குடியரசுத்தலைவர் விருதுகளை வழங்குகிறார்

प्रविष्टि तिथि: 02 DEC 2021 3:00PM by PIB Chennai

புதுதில்லி, டிசம்பர் 2, 2021

மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெற சிறப்பாகப் பணியாற்றிய  தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் மாநில/மாவட்ட நிர்வாகங்கள் போன்றவற்றிற்கு குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தேசிய விருதுகளை வழங்குகிறார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்  மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிப்புத் துறை (திவ்யாங்ஜன்), டிசம்பர் 3, 2021 அன்று புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் ஏற்பாடு செய்துள்ள ‘சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின’ சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குவார்.

2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளை அதிகாரமளிப்பதற்கான தேசிய விருதுகள் பின்வரும் பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன

  1. மாற்றுத்திறன் கொண்ட சிறந்தப் பணியாளர்/சுய தொழில் செய்பவர்;
  2. சிறந்த வேலையளிப்பவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அதிகாரிகள் மற்றும்/அல்லது ஏஜென்சிகள்;
  3. மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெறுவதற்காக உழைக்கும் சிறந்த தனிநபர் மற்றும் நிறுவனம்;
  4. முன்மாதிரி மாற்றுத்திறனாளி;
  5. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறந்த பயன்பாட்டு ஆராய்ச்சி அல்லது புது படைப்பு அல்லது தயாரிப்பு
  6. மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்குவதில் சிறந்த பணி
  7. மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டம்;
  8. சிறந்த ஆக்கப்பூர்வ மாற்றுத்திறனாளி;
  9. சிறந்த ஆக்கப்பூர்வ மாற்றுத்திறனாளிக் குழந்தை;
  10. சிறந்த பிரெய்லி அச்சகம்;
  11. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதில் சிறந்த மாநிலம்;
  12. சிறந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்

******


(रिलीज़ आईडी: 1777350) आगंतुक पटल : 287
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Malayalam