நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் ரூ.57,032.03 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சுமார் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

Posted On: 02 DEC 2021 10:17AM by PIB Chennai

2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் முந்தைய ஆண்டைப்போலவே குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் 30-11-2021 வரை 290.98 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.57,032.03 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சுமார் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப்பில் இருந்து 1,86,85,532 மெட்ரிக்டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  2021-22 கரீஃப் சந்தைப்பருவத்தில் 01.12.2021 நிலவரப்படி 5,27,561 மெட்ரிக்டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,034.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 71,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777101

                                                                                                       ****

(Release ID: 1777101)

 



(Release ID: 1777140) Visitor Counter : 197