தேர்தல் ஆணையம்

அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு

Posted On: 23 NOV 2021 11:15AM by PIB Chennai

அனைத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டை  இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று நடத்தியது. வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள், நடைபெற்று வரும் சிறப்பு திருத்த நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, குறைதீர்ப்பு, ஈவிஎம்கள்/ விவிபாட்டுகள், வாக்குப்பதிவு பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்பு, ஊடகங்கள். தொலைத்தொடர்பு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விவாதிப்பதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் திரு சுசில் சந்திரா, சரியான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதுடன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், அனைத்து வாக்காளர்களுக்கும் சிறப்பான வசதிகளை உறுதி செய்யவேண்டுமென்று தலைமை தேர்தல் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். வாக்காளர் பதிவு உள்பட நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்கள் குறித்த குறைகளை விரைந்து களைய வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். அரசியல் கட்சிகளிடம் குறைபாடுகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் அதைனைத் தீர்க்க தலைமை தேர்தல் அதிகாரிகள் அவ்வப்போது கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டுமென்று தலைமை தேர்தல் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் ஆணையர்கள் திரு. ராஜிவ் குமார், திரு அனுப் சந்திரா, முதன்மை செயலர் திரு. உமேஷ் சின்ஹா உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஒரு நாள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774164

****(Release ID: 1774352) Visitor Counter : 40