பிரதமர் அலுவலகம்
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் செயல்பாட்டிற்கு வந்தது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
प्रविष्टि तिथि:
21 NOV 2021 11:09PM by PIB Chennai
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் இன்று செயல்பாட்டிற்கு வந்திருப்பது பெருமைக்குரியது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறையில் நவீனமயத்திற்கான முயற்சிகள் முழு வீரியத்தோடு தொடரும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
‘‘பாதுகாப்புத் துறையில் தற்சார்பாக மாறும் இந்தியாவின் தேடலில் இன்றைய தினம் பெருமைக்குரியதாகும். ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் இந்தியக் கப்பற்படையில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது! இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இது நமது பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும். பாதுகாப்புத் துறையில் நவீனமயத்தை நோக்கிய நமது முயற்சிகள் முழு வீரியத்துடன் தொடரும்“
***
(रिलीज़ आईडी: 1773913)
आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam