பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிலரங்கை மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்
Posted On:
21 NOV 2021 5:28PM by PIB Chennai
நமது குழந்தைகளுக்கு நீதி வழங்குவது மட்டுமே மக்களாகவும் தேசமாகவும் ஜனநாயகத்தில் நாம் செய்யக்கூடிய சிறந்த செயல் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி கூறினார்.
விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் இன்று நடத்திய குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிலரங்கை மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், குழந்தைகள் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறார்கள் என்பதே ஒரு ஜனநாயகத்தின் உண்மையான அடையாளம் என்றார். குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்சோ சட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773744
-----
(Release ID: 1773822)
Visitor Counter : 227