தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழா 52-ல் இந்திய பனோரமா பிரிவை மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் தொடங்கி வைத்தார்
இந்திய சர்வதேச திரைப்பட விழா 52-ல் இந்திய பனோரமா பிரிவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் தொடங்கி வைத்தார். ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உடனிருந்தார்.
இந்த ஆண்டுக்கான இந்தியன் பனோரமா பிரிவின் கீழ் 24 திரைப்படங்கள் மற்றும் 20 திரைப்படம் சாரா படங்கள் இடம்பெற்றுள்ளன. ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய அமைச்சருடன் இணைந்து தொடக்கப் படங்களான செம்கோர் (திரைப்படம்) மற்றும் வேத்- தி விஷனரி (திரைப்படம் அல்லாதது) ஆகியவற்றின் நடிகர்கள் மற்றும் குழுவினரை பாராட்டி அவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கினார்.
திரைப்பட இயக்குநர்களை பாராட்டிய மத்திய அமைச்சர், “நாட்டின் தொலைதூர பகுதிகளில் இருந்து கதைகளை கொண்டு வர நீங்கள் அனைவரும் முயற்சி செய்திருக்கிறீர்கள். உள்ளடக்கம் தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீங்கள் சரியான உள்ளடக்கத்தை உருவாக்கினால், அது தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிற்கும் செல்லும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நம்மிடையே திறமைகள் உள்ளன, உங்கள் அனைவரின் உதவியுடனும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவை புதிய உயரத்திற்கு நாங்கள் கொண்டு செல்வோம்,” என்றார்.
கோவாவின் கடற்கரைக்கு இவ்விழாவை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த மறைந்த மனோகர் பாரிக்கரையும் அவர் நினைவு கூர்ந்தார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்ததை பார்த்தோம். ஆனால் தற்போது ஒரு திரைப்படத்தை உருவாக்கும் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களையும் கவுரவித்து வருகிறோம் என்றார் அவர். சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்தியாவில் வந்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1773718
****
(Release ID: 1773768)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam