வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மை அம்ரித் மகோத்சவத்தில், சுத்தமான நகரங்களுக்கு விருது வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவிப்பு
Posted On:
20 NOV 2021 2:54PM by PIB Chennai
தூய்மை அம்ரித் மகோத்சவத்தில், சுத்தமான நகரங்களுக்கு, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்து விருது வழங்கி கவுரவித்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தூய்மை அமிர்த மகோத்சவ விழாவை, மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சகம் தில்லி விஞ்ஞான் பவனில் நடத்தியது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட தூய்மைப் பணிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற விருதை தொடர்ந்து ஐந்தாவது முறையாக, இந்தூர் பெற்றது. சூரத், விஜயவாடா ஆகிய நகரங்கள் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தன.
ஒரு லட்சம் மக்களுக்கு கீழ் உள்ள நகரங்களின் பிரிவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விட்டா, லோனாவாலா மற்றும் சஸ்வத் ஆகிய நகரங்கள் முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. சிறந்த கங்கை நகரம் பிரிவில், வாரணாசி விருது பெற்றது.
100க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகள் அடங்கிய மாநிலங்களின் பிரிவில் சத்தீஸ்கர், தொடர்ந்து 3வது முறையாக தூய்மையான நகரம் என்ற விருதை பெற்றது.
100 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு குறைவாக உள்ள மாநிலங்கள் பிரிவில், ஜார்கண்ட் 2வது முறையாக தூய்மையான நகரம் என்ற விருதை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை நாம் கொண்டாடுவதால், இந்தாண்டு தூய்மை கணக்கெடுப்பு விருதுகள் சிறப்பு முக்கியத்துவம் பெறுகின்றன. கொவிட் பெருந்தொற்று காலத்திலும், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றினர். பாதுகாப்பற்ற தூய்மை நடவடிக்கைகளால், எந்த சுகாதாரப் பணியாளரும் ஆபத்தை சந்திக்க கூடாது என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது. நகரங்களை சுத்தமாக வைக்க திடக் கழிவு மோலாண்மையை திறம்பட மேற்கொள்வது அவசியம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, இந்திய பாரம்பரிய வாழ்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதி. தற்போது சுற்றுச் சூழல் பாதுகாப்பை ஒட்டு மொத்த உலகமும் வலியுறுத்துகிறது. கழிவுகளை குறைப்பது, மறுசுழற்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. கழிவையும், பணமாக்கும் முயற்ச்சியில் தொடக்க நிறுவனங்கள் சில தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது போன்ற துறைகளில் தொழில் முனைவோர்களையும், முதலீடுகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி பேசுகையில், நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், இதற்கு முன் இல்லாத கூட்டு முயற்சிகளின் பலனால் ஏற்பட்டது என கூறினார். தூய்மை இந்தியா இயக்கம், தற்போது மக்கள் இயக்கமாகவும் மாறியுள்ளது என மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773458
-----
(Release ID: 1773513)
Visitor Counter : 317