இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உடல் தகுதி இந்தியா வினாடி வினா- 2021 போட்டிக்கு மாணவர்கள் தகுதி பெற பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில் 2 தொடக்கநிலை சுற்றுகள் நடைபெறும்
Posted On:
15 NOV 2021 2:43PM by PIB Chennai
முக்கிய அம்சங்கள்:
- தொடக்கநிலை சுற்றில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பர் மாதத்தில் மாநிலச் சுற்று போட்டியில் பங்கேற்கலாம்
- மாநில சுற்றில் வெற்றி பெறுபவர்கள் 2022 ஜனவரி- பிப்ரவரியில் நடைபெறும் தேசிய அளிவிலான போட்டியில் பங்கேற்பார்கள்
இந்த ஆண்டின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட உடல் தகுதி இந்தியா வினாடி வினா போட்டி இனி இரண்டு தொடக்கநிலை சுற்றுக்களைக் கொண்டதாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் ஏதாவது ஒரு சுற்றிலோ அல்லது இரண்டிலுமே பங்கேற்கலாம்.
இரண்டு தொடக்கநிலை சுற்றுக்களில் தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த கட்டத்துக்கு மாணவர்கள் இறுதி செய்யப்படுவார்கள். இரண்டு சுற்றுக்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பலன் கிடைக்கும்.
இரண்டாவது தொடக்கநிலை சுற்றுக்கான தேதியும் நேரமும் விரைவில் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு மட்டத்திலும் வெற்றி பெறுபவர்கள் ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்புடன் மாநில மற்றும் தேசிய அளவிலான சாம்பியன் பட்டத்தையும் பெற முடியும்.
இந்தியாவின் வளமையான விளையாட்டு வரலாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த வினாடி வினா போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
*******
(Release ID: 1772035)
Visitor Counter : 376