சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

தொலை தூர சட்டம் பற்றிய வாகன பிரச்சாரம் : நீதித்துறை தொடங்கியது

Posted On: 08 NOV 2021 2:45PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகதொலை தூர சட்டம் பற்றிய ஒருவார கால வாகன பிரச்சாரத்தை  நீதித்துறை இன்று தொடங்கியது.

சட்ட ஆலோசனை தேவைப்படுவோர்கள், தொலைபேசி மற்றும் காணொலி காட்சி மூலம் சட்ட ஆலோசனை பெற விரும்புவுர்களை ஊக்குவிப்பதற்காக இந்த பிரச்சார வாரம் நடத்தப்படுகிறது. இதில் தொலை தூர சட்ட சேவைகளை பெறுவதற்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு (சிஎஸ்சி) செல்லும்படி வலியுறுத்தப்படுவர். நாடு முழுவதும் உள்ள டிஜிட்டல் வசதியுடன் கூடிய 4  லட்சம் சிஎஸ்சி மையங்கள் உதவியுடன்இந்த தொலை தூர சட்டம்  பற்றிய வாகன பிரச்சாரம் நடத்தப்படுகிறது. 

முதல் பிரச்சார வாகனம், நீதித்துறை செயலாளரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பிரச்சார வாகனம் தினந்தோறும் 30-40 கி.மீ தூரம் சென்று தொலை தூர சட்ட சேவைகள்  பற்றிய தகவல்களை துண்டு பிரசுரங்கள் மற்றும் வீடியோ மூலம் தெரிவிக்கும். தொலை தூர சட்ட ஆலோசனைகள் பெறவும், தங்கள் வழக்குகளை பதிவு செய்வது பற்றி கிராம மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குறுந்தகவல்கள் அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

ஒருவார கால பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக தொலைதூர சட்டம் குறித்த கைப்பேசி செயலியை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சர் ஆகியோர் நவம்பர் 13ம் தேதி தொடங்கி வைக்கின்றனர்.  இந்த செயலி, பயனாளிகளுக்கு, சட்ட ஆலோசனைகள் வழங்கும் வழக்கறிஞர்களுடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த செயலி தொடங்கப்பப்பட்ட பின் இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770010

****



(Release ID: 1770050) Visitor Counter : 174