பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரோமில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கிடையே ஸ்பெயின் பிரதமருடன் பிரதமரின் சந்திப்பு

प्रविष्टि तिथि: 31 OCT 2021 9:48PM by PIB Chennai

2021 அக்டோபர் 31ல், ரோமில் ஜி-20 உச்சிமாநாடுக்கிடையே ஸ்பெயின் பிரதமர் மேன்மைதங்கிய திரு பெட்ரோ சான்செஸைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

2. ஏர்பஸ் ஸ்பெயின் நிறுவனத்திடமிருந்து 56  சி295 போர்விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டது உட்பட இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் அதிகரித்திருப்பதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.  இவற்றில் 40, டாட்டா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இமொபிலிட்டி, தூய தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட பொருள்கள், ஆழ்கடல் கண்டுபிடிப்பு போன்ற புதிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க  இவர்கள் ஒப்புக் கொண்டனர்.  பசுமை ஹைட்ரஜன்,  அடிப்படைக்  கட்டமைப்பு, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய ஸ்பெயினுக்கு  அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இந்தியாவின் தேசிய அடிப்படை கட்டமைப்புத்  திட்டம், சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம், விரைவு சக்தித் திட்டம் ஆகியவற்றில் கூடுதல் பயனடையுமாறும் கூறினார். 

3. இந்திய - ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் அதேபோல் பருவ நிலை மாற்றம் குறித்த செயல்திட்டத்தில் ஒத்துழைப்பு, வரவிருக்கும் சிஓபி26 முன்னுரிமைகள்,  பற்றியும் இரு தலைவர்களும் விவாதித்தனர். ஆப்கானிஸ்தான்,  இந்திய - பசிபிக் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களின் மீதான கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர். 

4. பிரதமர் சான்செஸை  இந்தியாவில் அடுத்த ஆண்டு வரவேற்பதைப் பிரதமர் மோடி எதிர்நோக்கி  இருக்கிறார் 


***


(रिलीज़ आईडी: 1770026) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam