பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ சாந்த் தியானேஷ்வர் மஹாராஜ் பால்கி மார்க் மற்றும் ஸ்ரீ சாந்த் துக்காராம் மஹாராஜ் பால்கி மார்க் ஆகிய முக்கியப் பிரிவுகளின் நான்குவழிச் சாலைக்குப் பிரதமர் நவம்பர் 8 அன்று அடிக்கல் நாட்டவுள்ளார்


இந்த தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் ‘பால்கி’ செல்வதற்கான பிரத்யேக நடைபாதைகள் கட்டப்படவுள்ளன

பந்தர்பூருக்குப் போக்குவரத்து இணைப்பை அதிகரிப்பதற்கான பல முனை சாலைத் திட்டங்களையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார்

Posted On: 07 NOV 2021 3:49PM by PIB Chennai

பந்தர்பூருக்கு பக்தர்கள் வருகைக்கு வசதி செய்யும் முயற்சியாக ஸ்ரீ சாந்த் தியானேஷ்வர் மஹாராஜ் பால்கி மார்கின் (என் எச் 965) ஐந்து பிரிவுகளில் நான்குவழிச் சாலைக்கும், ஸ்ரீ சாந்த் துக்காராம் மஹாராஜ் பால்கி மார்கின் (என் எச் 965ஜி) மூன்று பிரிவுகளுக்கும் 2021 நவம்பர் 8 அன்று பிற்பகல் 3:30 மணிக்குக் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் பக்தர்கள் தடையின்றி, பாதுகாப்பாக ‘பால்கி’ செல்வதற்கான பிரத்யேக நடைபாதைகள் கட்டப்படவுள்ளன.

 

திவேகாட்டிலிருந்து மோஹோல் வரை சுமார் 221 கிலோமீட்டர் சாந்த் தியானேஷ்வர் மஹாராஜ் பால்கி மார்க் மற்றும் பட்டாஸ் முதல் டொண்டாலே – பொண்டாலே வரை சுமார் 130 கிலோ மீட்டர் சாந்த் துக்காராம் மஹாராஜ் பால்கி மார்க் முறையே ரூ.6690 கோடி, ரூ.4400 கோடி மதிப்பீட்டு செலவில், இரு பக்கங்களிலும் பால்கி செல்வதற்கான பிரத்யேக நடைபாதைகளுடன் நான்குவழிச் சாலை ஆமைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின்போது, பந்தர்பூருக்கு போக்குவரத்துத் தொடர்பை அதிகரிப்பதற்காக பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் ரூ.1180 கோடிக்கும் கூடுதல் மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ள 223 கிலோ மீட்டருக்கும் அதிகமான, பூர்த்தியடைந்த, மேம்படுத்தப்பட்ட சாலைத் திட்டங்களையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மஹாஸ்வாத்-பிலிவ்-பந்தர்ப்பூர் (என்எச் 548இ), குர்துவாடி – பந்தர்ப்பூர் (என்எச் 965சி), பந்தர்ப்பூர்-சங்கோலா (என்எச் 965சி), என்எச் 561எ–ன் தெம்பூர்ணி-பந்தர்ப்பூர் பிரிவு, என்எச் 561எ-ன் பந்தர்ப்பூர்-மங்கல்வேதா-உமாதி பிரிவு ஆகியவை இந்தத் திட்டங்களில் உட்பட்டதாகும்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், மஹாராஷ்டிர முதலமைச்சர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்

***


(Release ID: 1769868) Visitor Counter : 230