பிரதமர் அலுவலகம்

கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சி மாநாட்டில் ‘செயல் ஒற்றுமை-முக்கியமான தசாப்தம்’ என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்றினார்.

Posted On: 01 NOV 2021 11:33PM by PIB Chennai

மேன்மையாளர்களே,

நண்பர் போரிஸ் அவர்களே, ஏற்றுக்கொள்ளுதல் பற்றிய முக்கியமான பிரச்சனையில் எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு  நன்றி!

உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த விவாதத்தில் வெப்பமயமாதல் தடுப்பு போன்ற முக்கியத்துவத்தை வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு இது அநீதியாகும்.

இந்தியா உட்பட பெரும்பாலான வளரும் நாடுகளில் உள்ள விவசாயிகளுக்குக் காலநிலை மாற்றம் ஒரு பெரிய சவாலாக உள்ளது - சாகுபடி முறை மாறுது, பருவ மழை பொய்த்துப் போதல், அதிக மழை மற்றும் வெள்ளம் அல்லது அடிக்கடி ஏற்படும் புயல்களால் பயிர்கள் சேதம் ஆகியவற்றை சந்திக்கின்றனர். குடிநீர் ஆதாரங்கள் முதல் மலிவு விலை வீடுகள் வரை அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மீள்தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.

மேன்மையாளர்களே,

இந்தச் சூழலில் எனக்கு மூன்று கருத்துக்கள் உள்ளன. முதலில், நமது வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் ஏற்றுக்கொள்ளுதலை முக்கியப் பகுதியாக மாற்ற வேண்டும். 'நல் சே ஜல்'- அனைவருக்கும் குழாய் நீர், 'ஸ்வச் பாரத்'- தூய்மை இந்தியா மற்றும் 'உஜ்வாலா'- இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமையல் எரிவாயு போன்ற திட்டங்கள், மது ஏழைக் குடிமக்களுக்கு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன. இரண்டாவதாக, பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்குப் போதுமான அறிவைக் கொண்டுள்ளன.

நமது ஏற்றுக்கொள்ளல் கொள்கைகளில் இந்தப் பாரம்பரிய நடைமுறைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அறிவு ஓட்டம் புதிய தலைமுறைக்குக் கடத்தப்படும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு இணங்க வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதும் ஏற்றுக்கொள்ளலின் முக்கிய தூணாக இருக்கலாம். மூன்றாவதாக, ஏற்றுக்கொள்ளல் முறைகள் உள்ளூர் நடைமுறையாக இருக்கலாம், ஆனால் பின்தங்கிய நாடுகள் அவற்றுக்கு உலகளாவிய ஆதரவைத் தர வேண்டும்.

உள்ளூர் ஏற்றுக்கொள்ளலுக்கு உலகளாவிய ஆதரவு என்ற யோசனையுடன், பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் முன்முயற்சியை இந்தியா எடுத்துள்ளது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

____________



(Release ID: 1768892) Visitor Counter : 183