பிரதமர் அலுவலகம்

ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 28 OCT 2021 11:38AM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கவும் திரு.மோடி ஒப்புதல் அளித்துள்ளார்

“ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், தாத்ரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த சோகமான தருணத்தில், உயிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்: PM @narendramodi

ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்து காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்: PM @narendramodi” என்று பிரதமர் அலுவலக டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

***



(Release ID: 1767143) Visitor Counter : 210