நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நியாய விலைக் கடைகளின் நிதி நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: உணவு செயலாளர்

Posted On: 27 OCT 2021 1:00PM by PIB Chennai

நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவது குறித்த காணொலி கூட்டத்தில் பேசிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் திரு சுதன்ஷு பாண்டே, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நிதி சேவைகள் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் மற்றும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்,

சிஎஸ்சி வழங்கும் பல்வேறு சேவைகளை பற்றி அதன் தலைமை செயல் அதிகாரி விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த முயற்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக மாநில/யூனியன் பிரதேச அரசுகளைச் சந்திக்கவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் சிஎஸ்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

நியாய விலைக்கடைகளின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சிஎஸ்சி-யின் ஒத்துழைப்பை மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் பாராட்டினர். உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சாத்தியக்கூறுகளை மதிப்பாய்வு செய்ய சிஎஸ்சி உடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766854

***

(Release ID: 1766854) 



(Release ID: 1766908) Visitor Counter : 184