பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது

Posted On: 26 OCT 2021 11:11AM by PIB Chennai

இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.

இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். “21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை” என்பது இந்த வருட மாநாட்டின் மையக்கருவாகும்.

பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சர் மாநாட்டில் உரையாற்றவுள்ளனர். பல்வேறு அமர்வுகளுக்கும் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

இந்திய-பசிபிக் கடல்சார் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல் மாற்றங்கள் குறித்த விரிவான விவாதத்திற்கான தளத்தை இந்த கூட்டத்தின் மூலம் இந்திய கடற்படை மற்றும் தேசிய கடல்சார் அமைப்பு தொடர்ந்து வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766500

*******(Release ID: 1766618) Visitor Counter : 202