தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா: மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் இஸ்த்வான் ஸாபோ ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருது - மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் அறிவிப்பு

Posted On: 22 OCT 2021 9:20AM by PIB Chennai

கோவாவில் நடைபெறவுள்ள 52வது சர்வதேச திரைப்படத் திருவிழாவில், அமெரிக்க திரைப்பட இயக்குனர்  மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் ஹங்கேரியன் திரைப்பட இயக்குனர் இஸ்த்வான் ஸாபோ ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படும் என  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

நாட்டின் 52வது சர்வதேச திரைப்படத் திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் திரு அனுராக் தாகூர் கூறுகையில், ‘‘கதை கூறுபவர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. நமது கதைகள் உலகின் கற்பனையைக் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள  பல வகையான கதைகள், நம்மை விஷயங்கள் உள்ள துணைக் கண்டங்களாக மாற்றுகிறது’’ என்றார்.

அமெரிக்க திரைப்பட இயக்குனர்  மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் ஹங்கேரியன் திரைப்பட இயக்குனர் இஸ்த்வான் ஸாபோ ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

முதல் முறையாக, இந்திய சர்வேதேச திரைப்பட விழா,  ஓடிடி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் தெரிவித்தார். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜி-5, வூட் & சோனி ஆகிய நிறுவனங்கள் த்திரைப்படவிழாவில்-முதல்முறையாக பங்கேற்கின்றன. 

நெட்ஃபிளிக்ஸ நிறுவனம் மூன்று நாள் மெய்நிகர் மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சியை  பாரீசில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ், கோபிளின்ங்ஸ் ஸ்கூல் எல்’ இமேஜ் ஆகிய நிறுவனங்களுடன் நடத்துகிறது.  

நாடு முழுவதும் உள்ள இளம் திறமையாளர்களுக்கு, முன்னணி  சினிமா தயாரிப்பாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த  இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒரு தளத்தை வழங்கும். சுதந்திர இந்தியாவின் பொன்விழாவை முன்னிட்டு சினிமாத் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடவும், திரைப்படவிழாவின் மாஸ்டர் வகுப்புகளில் பங்கேற்கவும், 30 வயதுக்குட்பட்ட 75 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் என மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் அறிவித்தார். நாடு முழுவதும் இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, போட்டி மூலம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 75 இளம் சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், திரைக்கதை, வசனம் எழுதுபவர்கள் உட்பட சினிமாத்துறயைச் சேர்ந்த பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை ஏற்படுத்துவதை இந்தபோட்டி நோக்கமாக கொண்டுள்ளது.   இந்தப் போட்டிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அக்டோபர் 30ம் தேதி கடைசி நாள். இது குறித்து விரிவான வழிகாட்டுதல்களை www.dff.gov.in மற்றும் www.iffi.org  ஆகிய இணையதளங்களில் காணலாம்.

முதல் முறையாக  பிரிக்ஸ் நாடுகளின் திரைப்படங்களும் இந்த திரைப்படவிழாவில் காட்டப்பட உள்ளன என மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765632

****

(Release ID: 1765632)(Release ID: 1765716) Visitor Counter : 151