பிரதமர் அலுவலகம்
உத்தராகண்டில் கனமழை காரணமாக உயிரிழந்தோருக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2021 9:11PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்;
“உத்தராகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்க நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1765075)
வருகையாளர் எண்ணிக்கை : 221
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam