நிலக்கரி அமைச்சகம்

அடுத்த ஆண்டிலிருந்து நிலக்கரி உற்பத்தியை நான்கு மில்லியன் டன்னிலிருந்து இருபது மில்லியன் டன்களாக உயர்த்த என்எல்சி இந்தியா நிறுவனம் முயற்சி

Posted On: 13 OCT 2021 3:51PM by PIB Chennai

ஒடிசாவில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் இந்தாண்டு நிலக்கரி உற்பத்தி இதுவரை இரண்டு மில்லியன் டன்களைக் கடந்துள்ளது.  

நடப்பாண்டில் நான்கு மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி இலக்கிலிருந்து ஆண்டுக்கு ஆறு மில்லியன் டன்னாக உயர்த்த என்எல்சி இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிலக்கரியின் தேவை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு தலபிரா நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரி உற்பத்தியை நடப்பாண்டில் பத்து மில்லியன் டன்னிலிருந்து  அடுத்த ஆண்டு முதல் இருபது மில்லியன் டன்னாக உயர்த்த என்எல்சி இந்தியா நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தூத்துக்குடியில் உள்ள என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தென்மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்துக்கு அதிக பங்காக நாற்பது சதவீதம் அளிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763604

------



(Release ID: 1763718) Visitor Counter : 201