பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 13 OCT 2021 10:19AM by PIB Chennai

துர்காஷ்டமி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அன்னை துர்காதேவியின் ஆசீர்வாதங்கள் நமக்கு எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ள பிரதமர், அவரது ஆசீர்வாதங்கள், மகிழ்ச்சி உணர்வு மற்றும் நமது சமுதாயத்தின் நலனை அதிகரிக்கச் செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

துர்காஷ்டமி நன்னாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை துர்காதேவியின் ஆசீர்வாதங்கள் நமக்கு எப்போதும் உண்டு. நமது சமுதாயம் அன்னையின் ஆசீர்வாதத்துடன் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் திகழட்டும்.

உங்கள் அனைவருக்கும் மகாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நவராத்திரி புனித நாளில் அன்னை மகா கௌரியை வழிபடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது ஆசீர்வாதத்தால் அனைவரின் வாழ்வும் சிறந்து விளங்கட்டும். அன்னை மகா கௌரியின் துதிபாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1763541) आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam