மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நாஸ்காமின் ‘வடிவமைப்பு மற்றும் பொறியியல் உச்சிமாநாட்டின்’ 13-வது பதிப்பில் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாற்றினார்
Posted On:
06 OCT 2021 6:41PM by PIB Chennai
‘என்ஜினியரிங் தி நெக்ஸ்ட்’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு இன்று நடைபெற்ற நாஸ்காமின் ‘வடிவமைப்பு மற்றும் பொறியியல் உச்சிமாநாட்டின்’ 13-வது பதிப்பில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் காணொலி மூலம் உரையாற்றினார்.
2021 அக்டோபர் 6 முதல் 7 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாடு, 4 குறிக்கோள்களில் சிறப்பு கவனம் செலுத்தி உலகளாவிய பொறியியல் மற்றும் வடிவமைப்பு முயற்சிகளை கொண்டாடுகிறது. மதிப்பு மற்றும் வளர்ச்சியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, வாடிக்கையாளர் வெற்றிக்கான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வேகமான தயாரிப்பு சுழற்சி, வேலை கட்டமைப்பின் எதிர்காலத்தை வரையறுத்தல் மற்றும் வணிகத்தை நிலைத்தன்மை இலக்குகளுக்கு சீரமைத்தல் ஆகியவையே இந்த 4 குறிக்கோள்களாகும்.
தொடக்க உரை ஆற்றிய திரு சந்திரசேகர், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை $ 31 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டுகிறது என்றும் 1000-க்கும் மேற்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை பல்வேறு துறைகளில் அமைத்துள்ளன என்றும் கூறினார்.
மேலும், முதல் 50 பொறியியல் சேவை வழங்குநர்களில் 12 பேர் இந்தியாவை தலைமையிடமாகவும், 44 பேர் இந்தியாவில் பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செயல்பாடுகளையும் கொண்டுள்ளனர். 50 புதுமையான உலகளாவிய நிறுவனங்களில் 70%-க்கும் அதிகமானவை இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பிலும் இந்தியாவின் பங்களிப்பு இருப்பது போல் இருக்கிறது என்று அவர் கூறினார்.
சிறந்தது இனிமேல் தான் வரவிருக்கிறது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரம் எனும் லட்சியத்தை எட்டுவதற்கான நமது லட்சியத்தில் உற்பத்தி, பொறியியல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761507
-----
(Release ID: 1761548)
Visitor Counter : 245