ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ ஐகானிக் வார கொண்டாட்டம்: திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Posted On: 04 OCT 2021 3:24PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின்  விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ ஐகானிக் வார கொண்டாட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  திரு மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இதை முன்னிட்டு பஞ்சாப்பில் உள்ள தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (NIPER) ஒரு வார நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஐகானிக் வார நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

உலகின் மருந்தகம் இந்தியா என சரியாக அழைக்கப்படுகிறது. பொது மருந்துகளின் மிகப் பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது. உலகின் பல நாடுகளுக்கு பொது மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் மருந்து தொழில்கள் மேம்பாட்டில் தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்(நிபெர்முக்கிய பங்காற்றுகிறது. அவற்றின் பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சி, மருந்து தொழில் துறையின் தற்போதைய தேவைக்கு ஏற்ப சீரமைக்கப்பட வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதுமையான தீர்வுகளை நிபெர் வழங்க வேண்டும். நாட்டில் தொடங்கப்படும் தேசிய மருத்துவ கருவி பூங்காங்களுடன், நிபர் இணைந்து செயல்பட வேண்டும்

சுதந்திர இந்தியாவின் வைரவிழாவை கொண்டாடும் வேளையில், மருந்து நிறுவனங்கள் மற்றும் நிபெர்  ஆகியவை அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும். முக்கிய மருந்துகளின் மூலப்பொருட்களுக்கு நாம் இறக்குமதிகளை சார்ந்து உள்ளோம். இந்தியாவில் மிக குறைந்த அளவிலான மருந்துகளுக்கே காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்த 25 ஆண்டுகளில் மாற வேண்டும். மருந்து துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடைய நாம் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760787

****
 

 



(Release ID: 1760846) Visitor Counter : 257