நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரிச்சட்டங்கள் (திருத்த) சட்டம், 2021ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2021 2:24PM by PIB Chennai

28 மே 2012க்கு முன்பாக வெளிநாடுகளில் மறைமுகமாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட இந்திய சொத்துக்கள் தொடர்பாக வரி செலுத்தக்கோரி, வருங்காலத்தில் நோட்டீஸ் அனுப்பாமல் இருக்கும் வகையில், வருமான வரி சட்டம் 1961 மற்றும் வரிவிதிப்பு சட்ட (திருத்த) சட்டம் 2021 கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பான வரைவு விதிகளின்படி. சம்மந்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப்பெறவும்,  எவ்வித பணம், இழப்பீடு மற்றும் வட்டித்தொகை கோரமாட்டேன் என உத்தரவாதம் அளித்தால், அந்த சொத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவுச் சட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்தை அறிவதற்காக 28 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டு, 4 செப்டம்பர் 2021 வரை கருத்துக்கள் பெறப்பட்டது.

இந்த கருத்துக்களை ஆய்வுசெய்து அதில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு பரிந்துரைகளை உள்ளடக்கி, 1 அக்டோபர் 2021 தேதியிட்ட அரசிதழில் இந்த சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அறிந்துகொள்ள www.incometaxindia.gov.in காணவும்.

************


(வெளியீட்டு அடையாள எண்: 1760350) வருகையாளர் எண்ணிக்கை : 304
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada