நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் தளத்தில் 11,000 பங்குதாரர்கள் பருப்பு வகைகளின் இருப்பை அறிவித்தனர்

Posted On: 30 SEP 2021 2:26PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அதிகாரபூர்வமான தளத்தில் செப்டம்பர் 20, 2021 நிலவரப்படி11635 பங்குதாரர்கள் தங்களிடம் 3097694.42 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் இருப்பு இருப்பதாக  பதிவு செய்துள்ளனர்.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நுகர்வோர் விவகாரங்கள் துறை 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விலையை கண்காணித்து வருகிறது. கள்ளச் சந்தையைத் தடுப்பது, ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடு விதித்து அதன்மூலம் பொருட்களின் இருப்பை அதிகரித்தல், இறக்குமதிகளை ஊக்குவித்தல், விலை ஏற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றை பல்வேறு பயனளிக்கும் கொள்கை முயற்சிகளின் வாயிலாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் திறந்த வெளி சந்தையில் இருப்பில் உள்ள பருப்பு வகைகளின் அளவு குறித்த தரவை பெறுவது அவசியமானது. இதையடுத்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயலின் அனுமதி பெற்று அனைத்து பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் கையிருப்பில் உள்ள பொருட்களின் தகவல்களை இணையதளத்தில்  இந்தத் துறை பதிவு செய்துவருகிறது.

https://fcainfoweb.nic.in/psp என்ற தளத்தை பொதுமக்களும் அணுகலாம். பங்குதாரர்கள் தளத்தில் பதிவு செய்து கொண்டு பயனாளரின் அடையாள பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கலாம். இதன்பிறகு தாங்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள், இருக்கும் இடம் போன்றவற்றை பூர்த்தி செய்து தங்கள் வசம் இருக்கும் பருப்பு வகைகளின் தகவல்களை அதில் பதிவிடலாம். கைவசம் உள்ள சரக்குகளின் தகவல்களை புதுப்பிப்பது பங்குதாரர்களின் பொறுப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759608

*****************


(Release ID: 1759719) Visitor Counter : 251